ICC கனவு அணிக்கு தமிழச்சி நம்ம மிதாலிராஜ் தான் கேப்டன்…!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை கைப்பற்றி இங்கிலாந்து அணி சாதனை படைத்தது. இந்திய அணி 2-ஆம் இடம் பிடித்தது. இந்நிலையில், நடப்பு போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளைக் கொண்டு மகளிர் உலகக் கோப்பை 2017 கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) திங்கட்கிழமை அறிவித்தது. 12 பேர் கொண்ட இந்த அணிக்கு இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசி மகளிர் … Read more

காமன்வெல்த் யூத் விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சச்சின் தங்கம் வென்றார்

நாசாவ்: காமன்வெல்த் யூத் விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சச்சின் (49 கி.கி.,) தங்கம் வென்றார். பகாமசின் நாசாவ் நகரில் காமன்வெல்த் யூத் விளையாட்டு (14 முதல் 18 வயது வரை) நடந்தது. இதில் 64 நாடுகளில் இருந்து 1,300 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும், ஒரு அணிக்கு தலா 2 வீரர், 2 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆண்களுக்கான 49 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் சச்சின் 4-1 என்ற கணக்கில் வேல்சின் … Read more

தாளாளர் முறைகேடு செய்வதாக கூறி, ஆசிரியை விஷமருந்தி தற்கொலை செய்ய முயற்சி…!

திருச்செந்தூர்:  திசையன்விளை அருகேயுள்ள அரசூர் பூச்சிக்காட்டில் பணி வழங்குவதில் தாளாளர் முறைகேடு செய்வதாக கூறி, ஆசிரியை விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசூர் பூச்சிக்காட்டைச் சேர்ந்த லெபர்லின் மனைவி அருள் சுலோச்சனா (31). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அருள்சுலோச்சனா பூச்சிக்காடு புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் கடந்த ஓராண்டாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம், பள்ளியின் தாளாளர் இவருக்கு பணி ஆணை … Read more

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மத்திய குற்றப்பிரிவு பெண் தலைமை காவலர் சங்கீதா உயிரிழந்தார்..

புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த மத்திய குற்றப்பிரிவு பெண் தலைமை காவலர் சங்கீதா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஏலச்சீட்டு மோசடி தடுப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். சங்கீதா, சில ஆண்டுகளாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஜூன் மாதம் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து வட மாநிலத்தில் பணியாற்றி வரும் … Read more

தூர்வாரும் பணியை பார்க்க சென்ற அதிமுக எம்.எல்.ஏ விரட்டியடிப்பு…!

தேனி:ஆண்டிபட்டியில் தூர்வாரும் பணியை பார்க்க சென்ற அதிமுக எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வனை கிராம மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள குளம், குட்டை, ஏரி ஆகிய நீர் வரத்து பகுதிகளை தூர் வாரி சுத்தப்படுத்தி நிலத்தடி நீர் சேமிக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் குடிமராத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும் மேலும் ரூ.200 கோடி ஒதுக்கி, மாநிலம் முழுவதும் குளம் குட்டைகளின் குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் ஆண்டிபட்டியில் … Read more

மத்திய அரசின் முக்கிய துறைகளில் தனியார் நிறுவன ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு..?

மத்திய அரசின் முக்கிய துறைகளில் இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட சில முக்கிய பதவிகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து பணிகளை தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக ‘ஆயுஷ் அமைச்சகத்திலும், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திலும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம், மத்திய பணியாளர் துறை அமைச்சகத்தின் முறைப்படியான அறிக்கையை சமீபத்தில் அளித்துள்ளது. தற்போது மத்திய அரசில் 48 லட்சம் … Read more

தூத்துக்குடியில் கழிப்பறை விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்: மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்

தூத்துக்குடி ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக சங்கு கூடத்தில் இன்று   நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கும் – தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொலைதூர பார்வையில் தமிழகம் 2023 என்ற நோக்கத்தில் தமிழகத்தை திறந்த வெயிலில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாநிலமாக, உருவாக்க, முன்னோடித் … Read more

மூன்று மில்லியன் டாலர்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருகிறது RSS அமைப்பு

டெல்லி:வெளிநாடுகளில் இருந்து பணம் பெறும் நிறுவனங்கள் குறித்து பிரதமராவதற்கு முன் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்து இருந்தார். ‘வெறுப்பிற்கான நிதி வழங்குவதை எதிர்க்கும் பிரச்சார குழு (The_Campaign_to_stop_Funding_Hate) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியாவிற்கான வளர்ச்சி, நிவாரண நிதி (India_Development_and_Relief_Fund) என்ற அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. இது மூன்று மில்லியன் டாலர்களை ஏழு ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் (RSS) நடத்தும் அமைப்புகளுக்கு வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை (2002) கூறுகிறது. அரசு சாரா நிறுவனங்கள் பெறும் நிதி குறித்து இந்திய அரசு … Read more

தூத்துக்குடியில் பரபரப்பு…ரூ.19 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன..!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி வடபாக போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த இருசக்கர வாகத்தை மறைத்தபோது போலீசாரிடம் முன்னுக்கு முரணாக பதில் தெரிவித்த அவர்கள் கையில் வைத்திருந்த பையை மறைத்தனர். இதைபார்த்த போலீசார் பையை வாங்கி சோதனை செய்தபோது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை பார்த்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் பிடித்து தூத்துக்குடி வடபாக காவல் நிலையத்திற்கு அழைத்து … Read more

ராஜஸ்தானில் கடந்த 350 ஆண்டுகளுக்கு பின் 773 மி.மீ அளவு மழை பெய்துள்ளது..!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 350 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மவுண்ட் அபுவில் 773 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்த கனமழையால் அதிக உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. மேற்கு வங்கம், குஜராத், மஹாராஸ்டிரம், பீகார், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் … Read more