லாலுவுக்கு இனி சலுகைகள் கிடையாது!!

பாட்னா:பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள மத்திய அரசு, பாட்னா விமான நிலையத்தில் அவரது கார், தனி வாசல் வழியாக செல்லும் சலுகையை, நேற்று ரத்து செய்தது.பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர், நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். ஆளும் கூட்டணியில், முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் அங்கம் வகிக்கிறது. லாலுவும், அவரது குடும்பத்தினரும், சொத்து குவிப்பு … Read more

பெட்ரோல், டீசல் விலை? இன்று…,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.88 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.92 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை -23) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 11 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.66.88 காசுகளும், டீசல் லிட்டருக்கு 2 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.57.92 காசுகளாகவும் உள்ளன.

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு!!

ராமேஸ்வரம்: நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். பின்னர் கடல்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று இவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 8 பேரையும் ஆக.4 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடிகர் கமலுக்கு ப.ஜா..எம்.பி ஆதரவு..,,

சென்னை:கமல் கோரிக்கையை அடுத்து, தமிழக அமைச்சர்களின் இணையதள முகவரி மற்றும் மொபைல் எண்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.நடிகர் கமலுக்கும், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ள வார்த்தை மோதல், சற்று அடங்கியுள்ள நிலையில், கமல் ரசிகர்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றனர். ‘தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களை, ஆதாரத்தோடு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு புகாராக அனுப்புங்கள்’ என, கமல் கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து, அவரது ரசிகர்கள், தமிழக அமைச்சர்களின் முகவரி மற்றும் மொபைல் போன் எண்களை, ‘வாட்ஸ் ஆப்’ … Read more

மிரட்டலை பொருட்படுத்தாமல் விழாவில் பங்கேற்ற அமைச்சர்!!!!

கரூர்:ஆளும் கட்சி, எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மிரட்டலை பொருட்படுத்தாமல், அமைச்சர் விஜயபாஸ்கர்இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.கரூர் மாவட்டத்தில், 2016 – 17ல், 64 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 7,796 இலவசசைக்கிள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவு மற்றும் அரசியல் நெருக்கடியால், சைக்கிள்கள் தாமதமாக வழங்கப்பட்டன.கரூர் மாவட்டத்தில், மற்ற மூன்று தொகுதிகளில் சைக்கிள் வழங்கப்பட்ட நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில், 17 பள்ளிகளில், 1,560 சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தன.இந்த தொகுதியின், எம்.எல்.ஏ.,வும், தினகரன்ஆதரவாளருமான, … Read more

இரண்டு நாட்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைப்பு!!

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர்.ஐ.ஆர்.சி.டி.சி.,யின் www.irctc.co.in எனும் இணையதளத்தில், ஆன்லைன் மூலம், ‘டிக்கெட்’ முன்பதிவு செய்யும்போதே, உணவும், முன்பதிவு செய்து கொள்ளலாம். ‘டிக்கெட்’ முன்பதிவு செய்யும் பயணியர், பல்வேறு காரணங்களால், அதை ரத்து செய்வதும் வழக்கம்.இந்நிலையில், இணையதளம் மேம்படுத்தும் பணிகள் நடப்பதால், … Read more

மீண்டும் மனித மண்டை ஓடுகள், விஷ பாட்டில்களுடன் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்..,

டெல்லி: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் சிலர் பாதி மொட்டை அடித்து போராட்டம் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு … Read more

நாமக்கல் ஒப்பந்ததாரர் மரண வழக்கு .. ‘மாஜி’ மந்திரி ஆஜர்

ஒப்பந்ததாரர் நாமக்கல் சுப்ரமணியம் மர்ம மரணம் குறித்த வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.நாமக்கல் – -மோகனுார் சாலை, ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர், சுப்ரமணியம், 58. இவர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர்; அரசு கட்டட ஒப்பந்ததாரர்.ஏப்., 7ல், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, நாமக்கல்லில், சுப்ரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.இது தொடர்பாக, சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில், இரு முறை … Read more

கதிராமங்கலத்தில் விஜயகாந்த் அதிரடி பேச்சு!!!

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் தே.மு.தி.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரேமலதா முன்னிலை வகித்தார்.இதில், பங்கேற்ற விஜயகாந்த் பேசியதாவது: கதிராமங்கலத்தில் மக்கள் எதிர்க்கும் இந்த திட்டம், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. வேலை கிடைக்கும் என நம்பி, நிலத்தை கொடுத்தவர்களுக்கு, ஓ.என்.ஜி.சி.,யில் வேலை கொடுக்கவில்லை.தமிழகத்தில் மக்கள் எதிர்க்கும் இது போன்ற திட்டங்கள், தி.மு.க.,- அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. போராடும் போது, போலீசை வைத்து அடக்க நினைக்க கூடாது,மக்களின் தேவைகளை நிறைவேற்றவே … Read more

தூத்துக்குடி அணி வெற்றி

டி.என்.பி.எல்: திண்டுக்கல்லுக்கு எதிரான போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன் இலக்கு கொண்டு ஆடிய திண்டுக்கல் அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் டி.என்.பி.எல் தொடரில் தூத்துக்குடி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.