குற்றாலம்: கல்லுரி மாணவிகளின் கருத்தெடுப்பு..,

 குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆய்வு நடத்தினர். தமிழகத்தில் அருவிகளின் நகரமாக விளங்கும் இயற்கை அன்னை கொடுத்த கொடையாக கருத்தப்படுவது குற்றாலம். சீசன் காலங்களில் சுமார் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பொருளாதாரத்துறை மாணவிகள் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்வர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு நடைபெற்றது. இதில் சுகாதாரம், அடிப்படை வசதிகள்,தங்கும் வசதி, உணவகங்கள், … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி : நாகலாந்து முதல்வர்

கோஹிமா: நாகாலாந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பா.ஜ., மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன், முதல்வர், டி.ஆர். ஜெலியாங் வெற்றி பெற்றார்.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த கட்சித் தலைவர் லீஜிட்சுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் ஜெலியாங் போர்க்கொடி துாக்கினார். தனக்கு, பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, லீஜிட்சுக்கு, கவர்னர், பி.பி. ஆச்சாரியா உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து, லீஜிட்சு தொடர்ந்த … Read more

ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் புதிய சாதனை..,

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தாலும், எதிர்க்கட்சிகளால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார், 72, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில், அதிக ஓட்டுகள் பெற்றவர் என்ற, 50 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர், ராம்நாத் கோவிந்த் அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் உட்பட, 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார், மொத்தமுள்ள, 10.69 லட்சம் ஓட்டுகளில், 3.67 லட்சம் ஓட்டுகளை … Read more

ஜூலை29 ல்அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்..,

கோவை:அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், கோவையில் வரும், 29ல் நடைபெறுகிறது; இதற்கான கால்கோள் விழா நேற்று நடந்தது.ஜெ., மறைவுக்குபின், அ.தி.மு.க.,வில் பல பிரிவுகள் உருவாகியுள்ளன. பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், கோவை கொடிசியா வளாகம் அருகே உள்ள மைதானத்தில், வரும், 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.25 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையிலும், 15 ஆயிரம் இருக்கைகள் போடவும் திட்டமிட்டு … Read more

கர்நாடக அணையில் இருந்து வரும் நீரின் அளவு குறைப்பு!!

 தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து,ஆண்டுதோறும், தமிழகத்தின் தேவைக்காக,192 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். முறைப்படி தண்ணீர் வழங்காமல், கர்நாடக அரசு மறுத்து வருகிறது.தென் மேற்கு பருவமழை துவங்கியதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியது. இதையடுத்து, காவிரியில், வினாடிக்கு, 4,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இது, சேலம் மாவட்டம், … Read more

பாகிஸ்தான் ராணுவம் அத்துமிறல்… இந்திய வீரர் பலி!!

ஸ்ரீநகர்:காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார்.காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இன்று மாலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் இந்திய நிலையை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் நிலைகளை தாக்கினர்.இரு தரப்புக்கும் பல மணிநேரங்களாக சண்டை தொடர்ந்து நடைபெற்றது. … Read more

பசுவில் இருந்து HIV-AIDS-க்கு மருந்து! : விஞ்ஞானிகள் சாதனை!

பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோயினை எதிர்த்து போராடுவதற்கான புதிய வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.இது தொடர்பாக, விஞ்ஞான இதழான Nature-இல் கட்டுரையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பசுவினைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் அமெரிக்க விஞ்ஞானிகள் தங்களது புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளனர்.4 பசு கன்றுகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட “டேவின் சோக்” தலைமையிலான விஞ்ஞானிகள் ஆச்சரியம் நிரம்பிய, அதிர்ச்சிகரமான முடிவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான … Read more

பசு குண்டர்களை எந்த வகையிலும் காப்பாற்றக்கூடாது..மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

பசு குண்டர்களை எந்த வகையிலும் காப்பாற்றக்கூடாது….மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை நாட்டில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் பசு குண்டர்களை எந்த வகையிலும் பாதுகாக்க கூடாது  மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடுமைாக எச்சரிக்கை விடுத்துள்ளது.  மத்தியில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசு குண்டர்கள், மாட்டிறைச்சி வைத்து இருப்போர், பசுக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் முஸ்லிம்கள், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் … Read more

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 28ம் தேதி மறியல்!! மா.கம்யூ அறிவிப்பு

சென்னை:நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த மா.கம்யூ முடிவு செய்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் தேர்வு’ தமிழக மாணவர்களை பாதிக்கிறது, மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பல மாதங்களாகியும்கிடைக்கவில்லை.குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்றிட மாநில அதிமுக அரசு உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. நீட் தேர்வு முடிந்து 15 சதவிகிதம் மத்திய … Read more

தல அஜித்துடைய சிலை ரெடியாகியது- புகைப்படம் உள்ளே

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் விவேகம் படத்திற்கு தான் பலரின் வெயிட்டிங். எப்படியும் ஆகஸ்ட் 10 இப்படம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விவேகம் படத்திற்காக அஜித் ரசிகர்கள் அவருக்காக சிலை ஒன்றை வடிவமைத்து வருகின்றனர். விவேகம் படத்தில் அஜித் ஆர்மி உடையில் நடந்து வருவது போல் இருக்கும் புகைப்படத்தை மாதிரியாக கொண்டு இந்த சிலையை செய்துள்ளனர். இதோ…