அமெரிக்க அமைச்சருக்கு முளை புற்றுநோய்..,

வாஷிங்டன்: அமெரிக்க குடியரசு கட்சியின் மூத்த தலைவரும், ‘செனட்’ எனப்படும், அந்நாட்டு பார்லிமென்ட் மேல் சபை எம்.பி.,யுமான, ஜான் மெக்கைன், 80, மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில், குடியரசு கட்சியின் மூத்த தலைவர், ஜான் மெக்கைன். முன்னாள் கடற்படை அதிகாரியான அவர், வியட்நாம் போரின்போது, அமெரிக்காவிற்காக போரில் பங்கேற்றார். வியட்நாம் அரசால் கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பின், அரசியலுக்கு வந்த ஜான் மெக்கைன், செனட் சபை, எம்.பி.,யாக, தொடர்ந்து ஆறு … Read more

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு..,

வாஷிங்டன்: ”ஏமாற்றும் நாடுகளால், அமெரிக்காவின் வளம் சுரண்டப்படுகிறது. அமெரிக்காவை காப்பாற்ற, உள்நாட்டு உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை, மீண்டும் இங்கு, ஏற்படுத்துவோம்,” என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ‘அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என, உறுதியளித்தார். இதைதொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், ‘அவுட் சோர்சிங்’ முறையில் வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பை தருவதை தடுக்கும் சட்டம், அந்த நாட்டு பார்லிமென்ட்டில் கொண்டு வரப்பட்டது. … Read more

பிரதமர் அமெரிக்கா பயணம்..,

இஸ்லாமாபாத்: ”அணு அணுகுண்டு சோதனை நடத்தாமல் இருப்பதற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர், பில் கிளிண்டன், எங்களுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் தர முன் வந்தார்,” என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி, அந்நாட்டில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட்டில், நவாஸ் ஷெரிப் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் என் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றன; … Read more

மோடிக்கு முதல்வர் வாழ்த்து!!

ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஸ்வரூபம் எடுக்கும் விஜயபாஸ்கர் வழக்கு..,

குட்கா தயாரிப்பாளர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, வருமான வரித்துறை யினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இன்று விசாரணைக்கு ஆஜராக, உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஏப்ரலில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகில் உள்ள, விஜயபாஸ் கருக்கு சொந்தமான வீடு, குவாரி மற்றும் கல்வி நிறுவனங்களிலும் சோதனை … Read more

மேற்கு வங்கத்தில் பா.ஜ., புது வியூகம்..,

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள பஞ்சாயத்து மற்றும் 2019 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, அம்மாநில மக்களை ஈர்க்க, புதிய வியூகத்தை, பா.ஜ., வகுத்துள்ளது. மேற்கு வங்க மக்களுக்கு மிகவும் பிடித்த, மீன், விளையாட்டு, இசை தொடர்பான திருவிழாக்கள், போட்டிகளை நடத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பஞ்சாயத்து … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி மாற்றம்..,

புதுடில்லி: டில்லியில், ஆம் ஆத்மியை சேர்ந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளார். இதன்படி, துணை முதல்வர் மனீஷ் சிசோடியா வசம் இருந்த வருவாய் துறை, போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கும், கூட்டுறவு சங்க பதிவுகள் துறை, நீர்வளத்துறை ராஜேந்தர் கவுதமிற்கும் வழங்கப்பட்டுள்ளது. சிசோடியாவிற்கு, கூடுதலாக சுற்றுலா துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

”கமல்ஹாசனுக்கு சமூக சிந்தனை இல்லை” தமிழிசை பேட்டி

அவனியாபுரம்: ”கமல்ஹாசனுக்கு சமூக சிந்தனை இல்லை. அவர் ஒரு சந்தர்ப்பவாதி,” என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: கமல்ஹாசனுக்கு சமூக சிந்தனை இல்லை. இந்தியை எதிர்த்து போராடுகிறேன் என்றால், இனி இந்தி படங்களில் நடிக்காமல் இருப்பாரா. விளம்பரத்திற்காக இப்படி சொல்கிறார். இப்படியே அரசியல் பேசி, முதல்வராகலாம், என கனவு காண்கிறார். கமல்ஹாசன் வந்துதான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. விருதுநகரில் அவர் கூறியதாவது: கலாசார சீர்கேட்டிற்கு காரணமாக இருந்த கமல், தற்போது … Read more

மாஜி அமைச்சர் திடீர் ராஜினாமா !!

 அ.தி.மு.க., சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. தினகரன் அணியில், முன்னாள் அமைச்சர்களான, செந்தில் பாலாஜி, பழனியப்பன், என்.டி.வெங்கடாசலம் ஆகியோர் உள்ளனர். இவர்கள், அமைச்சர் பதவி கேட்டு, பழனிசாமி அணியினருக்கு, நெருக்கடி கொடுத்தனர். தினகரன், ஜாமினில் வந்ததும், அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரும், பெருந்துறை, எம்.எல்.ஏ.,வுமான, என்.டி.வெங்கடாசலம், ‘அமைச்சர் பதவி இல்லையென்றால், மாவட்ட செயலர் பதவி வேண்டும்’ என வலியுறுத்தினார்.ஏனெனில், சசிகலா அணி, பன்னீர் அணி என, … Read more

கமல் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை- ஸ்டாலின் பேட்டி!!

சென்னை: ”நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி, வரும், 27ல், மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்,” என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், ஸ்டாலின் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது:’நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு உடனடியாக விலக்களிக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில், மாவட்ட தலைநகரங்களில், தி.மு.க., சார்பில், வரும், 27ல், மனித சங்கிலி போராட்டம் … Read more