புனிதத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேல் காவலர்கள் பலி

ஜெருசலேமில் புராதன நகரப் பகுதியில் யூதர்களால் மலைக்கோயில் என அழைக்கப்படும் இடத்தில் பைபிள் காலத்திய இரு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தத் தலம்தான் யூதர்களின் மிகப் புனிதமான தலமாக கருதப்படுகிறது.அதே சமயத்தில், மெக்கா, மதீனாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் முக்கியத்துவம் அளித்து வரும் அல்-அக்ஸா மசூதியும் அங்கு அமைந்துள்ளது. அந்த இடத்துக்குத் தனிப்பட்ட சொந்தம் கொண்டாடி யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடைபெறுவது உண்டு. இந்நிலையில், புனிதத் தலம் அருகே பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூவர் இஸ்ரேல் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு … Read more

“டிஐஜி ரூபாவின் இடமாற்றத்திற்கு கிரண்பேடி கண்டனம்”

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறை பெண் டி.ஐ.ஜியாக பதவி வகித்தவர் ரூபா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்றும் இதற்காக டி.ஜி.பி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் புகார் தெரிவித்ததோடு அது சம்மந்தப்பட்ட ஆவணங்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார் ரூபா. இந்த விவகாரம் இந்திய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த வாரம் … Read more

99 சதவீதம் ஓட்டுப்பதிவு!! ஓட்டு போட சென்றவர்களின் கைபேசிகள் பறிமுதல்..

நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் பீஹார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்., தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலின் ஓட்டுப் பதிவு தலைநகர் டில்லியிலும், அனைத்து மாநில தலைநகரங்களிலும் நேற்று நடந்தது. தேர்தலுக்காக பார்லிமென்ட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி முதல் தளத்தில் உள்ள 62ம் எண் அறை … Read more

காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள வானி ஹமா கிராமப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. முடிவில் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. … Read more

மசூதி இடத்தை அபகரித்த பாஜ எம்எல்ஏ!! பதற்றமான சூழ்நிலையால் 144 தடை உத்தரவு!

பிரதமர் மோடி தொகுதியான வாரனாசியில் உள்ள பிந்த்ரா தொகுதி எம்எல்ஏ.வாக பாஜ.வை சேர்ந்த அவதேஸ் சிங் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மசூதிக்கு சொந்தமான சிறிய நிலத்தில் மாடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று திடீரென அப்பகுதியில் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியில் அவதேஸ் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டனர். தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வந்து கட்டுமான பணியை நிறுத்தும்படி கூறினர். இதற்கு எம்எல்ஏ தரப்பினர் மறுப்பு தெரிவித்ததால் விஷயம் சிக்ரா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. … Read more

வெங்கையா நாயுடு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்!

இந்நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளாராக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் வெங்கையா நாயுடுவை நேற்று அறிவித்தது.வெங்கையா நாயுடு தொடர்ந்து நான்கு முறை ராஜ்யசபா உறுப்பினாராக இருந்து வருகிறார். பா.ஜ.க-வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் இவரை கட்சி முன்னிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘தனது அனுபவத்தால் வெங்கையா நாயுடு ராஜ்யசபையைச் சிறப்பாக வழி நடத்துவார்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் வெங்கையா … Read more

விவசாயிகள்இரும்பு சங்கிலியால் கை,கால்களை கட்டி போராட்டம்

காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 41 நாள்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். எனினும் வாக்களித்தபடி முதல்வரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், டெல்லியில் … Read more

புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் பாண்ட்யா

கால்பந்து நட்சத்திரங்கள் சீசனுக்கு ஏற்ப தங்களது ஹேர் ஸ்டைலை மாற்றுவது வழக்கம். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல் கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோணி ஆரம்பத்தில் அப்துல் கலாமின் ஜெராக்ஸ் போல காணப்பட்டார் டோணி. ஆனால் அப்துல் கலாமை விட சற்றே நீளமான முடியுடன் .. ப்ரீஸி தலையுடன் விக்கெட் கீப்பராக வெளுத்துக் கட்டி வந்தார். திடீரென அவரைத் தூக்கி கேப்டன் பதவியில் அமர்த்தியதும் தனது நீளமான சடை முடியை கட் செய்து … Read more

நிஜ வாழ்க்கையில் ‘ராபின் ஹூட்’

பீகார் மாநிலம் புப்ரி மாவட்டத்தை சேர்ந்த இர்ஃபான் என்ற 27 வயது வாலிபரை தென்கிழக்கு டில்லி பகுதியல் பூட்டிக் கிடந்த வீடுகளின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த பொருட்களை திருடியதாக டில்லி போலீசார் கைது செய்தனர். இந்த திருடனுக்கு வாட்ச் மற்றும் விலை உயர்ந்த கார்கள் மீது அதீத நாட்டம். இதனால் வீடுகளில் திருடும் போது ரோலக்ஸ் வாட்ச்களை குறித்து வைத்து திருடுவது வழக்கமாக கொண்டுள்ளான். டில்லி போலீஸ் கைது செய்தபோதும் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள … Read more

ஆசிரியரை தாக்கிய ஏபிவிபி மாணவர்

ஏபிவிபி மாணவர் பிரதீப் போகத் என்பவருக்கு ஆண்டு மதிப்பீட்டு ஜீரோ மதிப்பெண் வழங்கிய ஆசிரியரை தாக்கியதாக ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி மாணவர் மீது டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பகத் குளோபல் பிசினஸ் ஆபரேஷன்ஸ் பாடப்பிரிவில் முதுகலை பட்டயப்படிப்பு பயின்று வந்தார். இக்கல்லூரி முதல்வர் ருஸ்தகி கூறுகையில், ”போகத் ஜிரோ மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். ஏன் என்றால் அவர் கல்லூரிக்கு வருவதே கிடையாது. அஸ்வானி குமார் என்ற ஆசிரியரை கடந்த 14ம் தேதி மாலை 5 … Read more