2015ஆம் ஆண்டிற்கு பிறகு 2019இல் புதிய லேப்டப்களை அறிமுகபடுத்தும் எல்ஜி!

எல்ஜி நிறுவனமானது, கடைசியாக  2015ஆம் ஆண்டு புதிய லேப்டப்களை அறிமுகபடுத்தியது. அதன் பிறகு 2019ஆம் ஆண்டு இரண்டு புதிய லேப்டப் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த லேப்டப்களை 2 இன் 1 மாடலாக உருவாக்கி உள்ளது.  நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவருவதால் இதில் நிறைய எக்ஸ்ட்ரா புயூச்சர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 நிகழ்ச்சியில் எல்ஜி கிராம் லேப்டாப் மாடல்கள் 17-இன்ச் மற்றும் 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 14-இன்ச் லேப்டாப் மாடல் 360 டிகிரி வரை இந்த லேப்டப்பை திருப்பி வைக்க முடியும்.
இரண்டு லேப்டாப் மாடல்களும் இன்டெல் கோர் ஐ7-8565யு செயலி மற்றும் யுஎச்டி கிராபிக்ஸ் 620 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெமரி நீட்டிப்பு என பல அம்சங்களை கொண்டிருக்கிறது.
எல்ஜி புதிய மாடலில் 17-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 19.5மணி நேரம் பேட்டரி ஆயுள் வசதியுடன் வெளிவரும், பின்பு 14-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 21மணி நேரம் பேட்டரி ஆயுள் என நல்ல பேட்டரி பவருடன் களமிறங்கியுள்ளது. இதன் விலை சுமார் ஒரு லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment