2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஆர்பிஐ.
புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. கருப்பு பணத்தை ஒழிக்கவே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் செப். 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.2,000 நோட்டுகளை வழங்குவதற்கான படுவதையும் ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம்.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை வழங்கமான நடைமுறைதான். ரூ.2,000 நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகளை மக்களுக்கு செய்து கொடுக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். தினமும் எத்தனை 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என்று ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
ரூ.2,000 தாள்களை பெற்றுக்கொண்டு வேறு ரூபாய் தாள்கள் அளிக்கப்பட்ட விவரம், ரூ.2,000 தாள்கள் டெபாசிட் செய்யப்பட்ட விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என அறிவியுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுகையில், ரூ.1,000 மற்றும் ரூ.5,00 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் உடனடி தேவைக்காக ரூ.2,000 நோட்டுகள் வழங்கப்பட்டன.
உயர்மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடுகள் இல்லை. நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி சுத்தமான நோட்டு கொள்கையை பின்பற்றி வருகிறது. இந்த நேரத்தில், ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட தொடரின் நோட்டுகளை திரும்பப் பெற்று, புதிய நோட்டுகளை வெளியிடுகிறது.
நாங்கள் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுகிறோம், ஆனால் அவை சட்டப்பூர்வமான டெண்டராகத் தொடர்கின்றன. அந்த நோக்கம் நிறைவேறி விட்டது, இன்று போதுமான அளவு மற்ற வகை நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கூட அதன் உச்சமான 6 லட்சத்து 73,000 கோடியிலிருந்து சுமார் 3 லட்சத்து 62,000 கோடியாகக் குறைந்துள்ளது.
அச்சிடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. நோட்டுகளின் ஆயுட்காலமும் முடிந்துவிட்டது. மேலும் அவர் கூறுகையில், பணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் இறுதி வரை புழக்கத்தில் இருக்கும்.
அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் திரும்ப வரும் என நம்புகிறோம். வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏற்பாடு செய்யப்படும். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரபட வேண்டாம், 4 மாத கால அவகாசம் உள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார்.
₹2000 Denomination Banknotes – Withdrawal from Circulation; Will continue as Legal Tenderhttps://t.co/im8EBo42Wk
— ReserveBankOfIndia (@RBI) May 22, 2023