ஒரு செல்பிக்கு 2000 ரூபாயா!?

தற்பொழுது உள்ள காலத்தில், செல்பி எடுப்பது மிகவும் பழக்கமான ஒன்று. மக்கள் எங்கு போனாலும் தங்களின் மொபைல் போனில் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து அதை ஒரு ஞாபகார்த்தமாக வைத்து வருகின்றனர்.

அதே போல், செல்பியால் உயிரிழப்புகளும் நிறைய ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக, ரயில்வே காவல்துறையினர் ரயில்வே நிலையம், ரயில் தண்டவாளம் மற்றும் ஓடும் ரயிலில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என எச்சரிக்கை விதிக்கப்படும் என கூறி வருகின்றனர்.

மேலும், எல்லா ரயில்வே நிலையங்களில் இருக்கும் ஒளிபெறுக்கிகளிலும், இது குறித்து கூறப்படும் என்றும் கூறினார்கள்.