15 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் உடலுறவு கொண்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை – பிரான்ஸ் நாடாளுமன்றம்!

பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் உடலுறவு வைத்துக் கொள்வது கற்பழிப்பு என கருதப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என பிரான்ஸ் நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட, புதியதாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே பிரான்சில் 15 வயது நிறைவடைந்தவர்கள் வயது வந்தவர்கள் எனவும், அதற்கு கீழ் உள்ளவர்கள் வயதுக்கு வராதவர்கள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் உடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் வல்லுறவு மற்றும் கற்பழிப்பு என கருதப்படும்.

மேலும்15 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் உடலுறவு கொள்வது தான் பாலியல் பலாத்காரம் அல்ல, அத்து மீறுவதும் தவறானது தான் என தற்பொழுது கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நீதியமைச்சர் எரிக் டுபோண்ட் மோரெட்டி அவர்கள், தேசிய சட்டமன்றத்தில் இது எங்கள் குழந்தைகளுக்கும் நமது சமூகத்திற்குமான வரலாற்று சட்டம் என தெரிவித்துள்ளார். வீதிகளில் கூட சிறுவர்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதால் தான் பிரான்சில் இது போன்ற கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal