உடல் உறுப்பு தானம் செய்த 20 மாத குழந்தை!

உடல் உறுப்பு தானம் செய்த 20 மாத குழந்தை!

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் வசித்து வரும் ஆஷிஷ்குமார் தம்பதியினருக்கு பிறந்த 20 மாத குழந்தையான தனிஸ்ஷாவின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. 

உடல் உறுப்பு தானம் என்றால் அது பெரியவர்கள் செய்து தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் தற்போது 20 மாத குழந்தை ஒன்று தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் வசித்து வரும் ஆஷிஷ்குமார் தம்பதியினருக்கு பிறந்த 20 மாத குழந்தையான தனிஸ்ஷா வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக மேல் தளத்திலிருந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த 8ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 11ஆம் தேதியன்று குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கடந்த 11ஆம் தேதியன்று குழந்தை மூளைச்சாவு அடைந்துள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இது குறித்து குழந்தையின் தந்தை  ஆஷிஷ் குமார் கூறுகையில், மருத்துவர்கள் எனது  குழந்தை மூளை சாவு அடைந்து விட்டது என்று சொன்னதும் எனக்கு உயிரே போய்விட்டது. அதேவேளையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த போது, மற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு தேவைப்படும் உடல் உறுப்பு குறித்து கூறி இருந்தனர். அதனால் எனது குழந்தையின் உடலை மண்ணில் புதைப்பதை காட்டிலும் உடலுறுப்பு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தலாம் என முடிவெடுத்தேன்.

மருத்துவர்கள் சொன்னதும் எனது குழந்தையின் உறுப்புகளை அவளை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்தனர்.  இப்போது தனிஸ்ஷாவின் மூலம், 5 பேர் உயிர் பிழைத்து உள்ளன.  தனிஸ்ஷாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், கருவிழிப் படலம் முதலியவற்றை அறுவை சிகிச்சை செய்து குழந்தையிடம் இருந்து எடுத்து அதை தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube