சூறாவளி, புயல் காரணமாக மும்பையின் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள்!

சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை காரணங்கள் அதிகமாக மும்பையின் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை காரணங்களாலும், அதனால் ஏற்படும் மரங்களின் முறிவு மற்றும் நிலச்சரிவுகளாலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை நகரம் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரைக்கான இலாப நோக்கற்ற கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இயற்கை பேரிடர்களான சூறாவளி மற்றும் புயல் காரணமாக அதிகளவில் மும்பை மாநகரை சார்ந்துள்ள 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தான் அதிகமாக பதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலைக்கேற்ப செயல்படக்கூடிய அதிகமான மக்கள் தொகை மற்றும் நுட்பமான உட்கட்டமைப்பு கொண்ட கடலோர நகரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாததும் இதற்கான கரணம் என எச்சரித்துள்ளது. தெற்கு மும்பையிலுள்ள மக்கள் தான் அதிகளவில் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal