உத்தர பிரதேச பஞ்சாயத்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் – 20 கிலோ ரசகுல்லா பறிமுதல், இருவர் கைது!

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற அணியினரின் தொண்டர்கள் ரசகுல்லா வழங்கி கொண்டாடி வந்த நிலையில், கொரோனா விதிகளை பின்பற்றாததால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 20 கிலோ ரசகுல்லாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே செல்லும் நிலையில், அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகளை விதித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசுகள் அத்தியாவசிய தேவைகள் இன்றி திணறி வரும் நிலையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அடிக்கடி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் 4 கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நடைபெற்று முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற அணியின் தொண்டர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடி உள்ளனர்.

இந்நிலையில், இவர்களது வெற்றிக் கொண்டாட்டம் கொரோனா விதிமுறைகளை மீறி நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் பலர் கலந்து கொண்டதுடன், அங்கு வந்திருக்கும் மக்களுக்கு ரசகுல்லாவும் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹப்பூர் கிராமத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்கள்கொரோனா வழிகாட்டுதலை மீறி நடந்ததால், சிஆர்பிசியின் பிரிவு 144 கீழ், இதில் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பிறருக்கு கொடுத்து வந்த 20 கிலோ ரசகுல்லாவையும் பாத்திரத்துடன் அப்படியே காவல்துறையினரால் பறிமுதல் செய்துள்ளனர்.

author avatar
Rebekal