திருவள்ளூர் மாவட்டத்தில் யுடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய 2 இளைஞர்கள் கைது!

திருவள்ளூர் மாவட்டத்தில் யுடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய 2 இளைஞர்கள் கைது.

இந்தியாவில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும்  விதமாக, அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மதுக்கடைகள், மக்கள் கூடும் வணிக  வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மதுபான பிரியர்களுக்கு பெரும் பேரிழப்பாக உள்ளது. இதனால், அங்கங்கு கள்ள சாராயம் காய்ச்சி குடித்து வருகின்றனர். தொடர்ந்து, இளைஞர்கள் கள்ள சாராயம் காய்ச்சி கைது செய்யப்பட்டும் உள்ளனர். 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கன்னிகாபுரம் பகுதியில் இளைஞர்கள் கள்ள சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அங்கு யுடியூப் பார்த்து, குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கள்ள சாராயம் காய்ச்ச பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.