இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் 2-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பலி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை

By balakaliyamoorthy | Published: Jan 28, 2020 09:52 PM

  • கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதாவும், மாதேவனின் சகோதரர் சிவண்ணாவின் மகள் சவுந்தர்யாவும், தனது தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
  • அப்போது இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதா, ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தார். மாதேவனின் சகோதரர் சிவண்ணாவின் மகள் சவுந்தர்யா, கெலமங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் நேற்று காலை சவுந்தர்யாவை அவரது தாத்தா பசப்பா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமி வனிதாவும் உடன் சென்றாள். இதைத்தொடர்ந்து ஜெ.காருப்பள்ளி கிராமத்தின் அருகே கூட்டுரோடு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுமி வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சவுந்தர்யாவும், அவரது தாத்தா பசப்பாவும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc