ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பலாசா ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.
ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி கொண்ட சம்பவ இடத்திற்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.