Connect with us

ஆம்பூரில் சரக்கு ரயில் மோதி 2 ரயில்வே ஊழியர்கள் உயிரிழப்பு..!

முக்கியச் செய்திகள்

ஆம்பூரில் சரக்கு ரயில் மோதி 2 ரயில்வே ஊழியர்கள் உயிரிழப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிக்னல் கோளாறை சரி செய்து விட்டு ஸ்டேஷனுக்கு திரும்பிய 2 ரயில்வே ஊழியர்கள் மீதி சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் உள்ள பெங்களூர்-சென்னை வழித்தடத்தில் கனமழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு உள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பிரச்சனையை சரி செய்ய, ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகார் மாநில டெக்னீசியன் பர்வேஸ் குமார் ஆகிய இருவரும் கொட்டும் மழையில் சென்று சிக்னல் பிரச்சனையை சரி செய்துள்ளனர்.

பிரச்னையை சீராக்கியவுடன் ஸ்டேஷனுக்கு திரும்பிய இருவரும் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, சரக்கு ரயில் ஒன்று ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்றுள்ளது. கனமழை காரணமாக ரயில் வருவதை அறியாத இருவரும் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

More in முக்கியச் செய்திகள்

To Top