தளபதி விஜய் அவர்களின் சர்கார் படம் தீபாவளியன்று ரிலீசானது. இந்நிலையில் இந்த படத்திற்கு எதிராக ஆளும் கட்சியினர் பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து பல பிரச்சனைகளை தாண்டி இந்த படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு பின் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்தின் பேனர்களை கிழித்ததிற்கு இரண்டு பேர் அரிவாளுடன் மிரட்டல் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து சென்னை போலீசார் தனிப்படை அமைத்து இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சஞ்சய் மற்றும் இந்த விடீயோவை எடுத்த அனிஷெக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள லிங்கத்துறையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

source : tamil.cinebar.in