ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 2 பேர் பலி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்  இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரன் கிஷன்கன்ச் என்ற இடத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியுள்ளது.

இந்த மின்னல் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர விஜய், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.