தர்ணா போராட்டத்தில் 2 திமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி.!

தர்ணா போராட்டத்தில் 2 திமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி.!

  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து திமுக கட்சியினருடம் சாலையில் எம்.பி கனிமொழி தர்ணா போராட்டத்தில் கடந்த 3 மணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்.
  • இந்த போராட்டத்தில் லட்சுமி என்ற முதியவரும் ,அவரது மகன் சரவணன் ஆகிய இருவரும் தங்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட 335 பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 19 வாக்குகளில் அதிமுக 10 வாக்குகளும்  , திமுக 09 வாக்குகளும் பெற்றதாக கூறி அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக வெற்றிப் பெற்றதைக் கண்டித்து தூத்துக்குடி எம்.பி கனிமொழி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் திமுக கட்சியினருடம் சாலையில் எம்.பி கனிமொழி தர்ணா போராட்டத்தில் கடந்த 3 மணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த தர்ணா போராட்டத்தில் 2 திமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். லட்சுமி என்ற முதியவரும் ,அவரது மகன் சரவணன் ஆகிய இருவரும் தங்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் இருவரின் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு அங்குஇருந்து அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக 335 பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.பின்பு மாநில தேர்தல் ஆணையம் நிறுத்தப்பட்ட மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube