டாஸ்மாக் கடையில் முதல் நாளை விட 2-வது நாள் 30 கோடி குறைவு!

முதல் நாளை விட இரண்டாவது நாளான நேற்று, ரூ.30 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திறக்கப்பட்டது. இதனால், மதுபான பிரியர்கள், மதுக்கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து, மது வாங்கி சென்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடையை திறந்த முதல் நாளை விட, ஞாயிறுக்கிழமையான நேற்று வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாளில் ரூ.163 கோடிக்கு மது விற்பனையான நிலையில், 2-வது நாளான நேற்று 5 மண்டலங்களிலும் ரூ.133.1 கோடிக்கு மட்டுமே மது விற்பனையாகியுள்ளது. முதல் நாளை விட இரண்டாவது நாளான நேற்று, ரூ.30 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.