அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில் 2.31 கோடி ரொக்கம் 1 கிலோ தங்கம் கண்டெடுப்பு!!

0
391
CASH
CASH [Image Source : india.postsen ]

ஜெய்ப்பூரில் உள்ள அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில் ₹2.31 கோடி ரொக்கம் மற்றும் தங்கம் கண்டெடுக்கப்பட்டது.

ஜெய்ப்பூரில் யோஜனா பவன் எனப்படும் அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில், பூட்டியிருந்த அறைக்குள் இருந்து 2.31 கோடி ரொக்கம் மற்றும் 1 கிலோ தங்கம் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  102 சிஆர்பிசியின் கீழ், போலீசார் இந்த நோட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 7 அரசு ஊழியர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதில் கண்டெடுக்கப்பட்ட ரொக்கம் அனைத்தும் 2,000 மற்றும் 500 நோட்டுகள் எனவும் ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று ஸ்ரீவஸ்தவா மேலும் கூறினார். இதற்கிடையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.