சியான் விக்ரமின் சாமி-2 படத்தின் டைட்டில் சாமி ஸ்கொயர் என மாறுகிறது!

0
657

2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் சாமி. இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த சமயத்தில் அடுத்தபடியாக ரஜினி படத்தை ஹரி இயக்குவார் என்றெல்லாம் பேசப்பட்டது. அந்த அளவுக்கு மாஸ் ஹிட்டாக அந்தபடம் அமைந்தது. அதையடுத்து தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வந்த டைரக்டர் ஹரி, தற்போது 14 ஆண்டுகளுக்குப்பிறகு சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.இந்த படத்திலும் சியான் விக்ரம் ஆறுச்சாமியாகவே நடிக்கிறார். முந்தைய கதையின் தொடர்ச்சியாகவே சாமி-2 படக்கதையும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த திரிஷாவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக இப்போது கீர்த்தி சுரேசும் நடிக்க, கோட்டா சீனிவாசராவ் நடித்த வில்லன் வேடத்தில் அவரது மகனாக பாபி சிம்ஹா தொடர்கிறாராம்.மேலும், நேற்று இந்த சாமி-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், சாமி-2 என்ற தலைப்பை சாமி ஸ்கொயர் என்று வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here