முதல்வன் 2 இல்லையாம் அடுத்து இந்தியன் 2 தானாம் : ஷங்கர் அதிரடி

 ஷங்கர் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் தற்போது 2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார்.

இப்படம் முடிந்து அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்குவார் என கூறப்பட்டது, ஆனால், அது வெறும் வதந்தி தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஷங்கரும், கமல்ஹாசனும் நீண்ட நாட்களாக இந்தியனுக்கு பிறகு ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்து வருகின்றார்களாம்.
தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது, ஷங்கர் கமலை வைத்து இந்தியன் 2 எடுக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்துள்ளாராம்.
2.0 படம் ரிலிஸாகிய அடுத்த சில நாட்களிலேயே இப்படத்தின் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment