சியான் விக்ரமின் சாமி-2 படபிடிப்பு செப்டம்பர் 15 தொடங்கயுள்ளது..!

சியான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் விரைவில் வரும் செப்டம்பர் 15 தொடங்கயுள்ளது  என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவும், இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள்.

இரு கதாநாயகிகள் இருப்பதால் விக்ரம் இரட்டை வேடங்களில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.மற்ற டெக்னிசியன்கள் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

சாமி முதல் பாகத்தை சியான் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு பயங்கர எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.

Leave a Comment