2.0 படத்தின் டிரைலர் வெளியீடு …!தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியீடு …!

2.0 படத்தின் டிரைலர்  இன்று (நவம்பர்  3 ஆம் தேதி)  வெளியானது.

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர்  வெளியானது.
இன்று சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்சய் குமார், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை எமி ஜாக்சன் பங்கேற்றனர். 2.0 படத்தின் டிரைலர்  இன்று (நவம்பர்  3 ஆம் தேதி)  வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது .