2 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி…!!

கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார்.
கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றார். தனது சிங்கப்பூர் பயணத்தின் போது, ஆசியன் -இந்தியா சந்திப்பிலும் கலந்து கொள்கிறார். அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸையும் பிரதமர் மோடி, தனது சிங்கப்பூர் பயணத்தின் போது சந்தித்து பேச இருக்கிறார்.
சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தனது முதல் நிகழ்ச்சியாக சிங்கப்பூர் பின் டெக் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு சென்றடைந்தார். நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். முதல் நிகழ்ச்சியாக சிங்கப்பூர் பின்டெக் நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது சிங்கப்பூர் பயணத்தின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுகிறார். அமெரிக்க துணை ஜனாதிபதி- பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது,  இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment