#BREAKING: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2020-21 கல்வி ஆண்டைப் பொறுத்தவரை ஒன்றாம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு வரை படிக்க கூடிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் உள்ளனர். அதில், 12-ம் மாணவர்கள் மட்டுமே 10 லட்சம் பேர் உள்ளனர். மீதமுள்ள 90 லட்சம் பேர் 1 லிருந்து 11 வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையில் உள்ளனர்.

காரணம் கடந்த ஆண்டு முதல் பள்ளிக்கு மாணவர்கள் சரியாக செல்லவில்லை இதனால் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் உள்ளனர். இந்நிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்.

பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் இதர நல்ல திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்துள்ளார்.

எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்க கூடாது எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக்கூடாது எனவும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan