#FactCheck : 18 வயது சிறுமிகளின் வங்கிக் கணக்கில் 1,80,000.?

அரசு திட்டங்கள் குறித்து விளக்கும் ‘அரசு கியான்’ என்ற பிரபல யூடியூப் சேனல் ஒன்று, 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ‘பிரதான் மந்திரி லத்லி லக்ஷ்மி யோஜனா’ திட்டத்தின் கீழ் 51,80,000 செலுத்தப்படும் என தகவல் கூறியுள்ளது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து, இது குறித்து விளக்கமளித்த மத்திய அரசின் பிஐபி உண்மைச் சோதனைக் குழு, “மத்திய அரசால் அப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்படவில்லை” என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


இது போன்ற வதந்தி பரவுவது முதல் முறையல்ல… முன்னதாக பல வதந்திகள் இது போன்ற பரவியுள்ளது. பின்னர், அதற்கான முறையான விளக்கத்தை PIB Fact Check குழு தெரிவிப்பது வழக்கம்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.