மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு …!தினகரன் அதிரடி தகவல்

மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்துள்ளனர் என்று தினகரன் தெரிவித்துள்ளார்
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.
இதையடுத்து இந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.
Image result for TTV
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்  18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்துள்ளனர் .ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.18 பேரின் நலனும், கட்சியின் நலனும், மக்களின் விருப்பமும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே ஆகும்.  தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment