18 எம்.எல்.ஏக்கள் பதவி பறிப்பு…!சபாநாயகர் முடிவில் தவறு இல்லை…!மனு தள்ளுபடி …! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!

சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்று 3வது நீதிபதி சத்யநாராயணன் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
வழக்கு விவரம்:
அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ஆம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக முதலமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் 19 பேருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கின. இதனிடையே ஆளுநரிடம் மனு கொடுத்தவர்களின் ஒருவரான ஜக்கையன், தனது நிலையை மாற்றிக் கொண்ட நிலையில் எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கோரி, அதிமுக கொறடா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.
Image result for தங்கதமிழ்ச்செல்வன்
இதன் பேரில் 18 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து, 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். துரைசாமி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிவிப்பாணையும் வெளியிடக்கூடாது.
அதேபோல மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். இந்நிலையில் அக்டோபர் மாதம் முதல் நீதிபதி கே. ரவிசந்திரபாபு வழக்கை விசாரிக்க தொடங்கினர்.
ஆனால் நவம்பர் 2 ஆம் தேதி அன்று நீதிபதி கே.ரவிசந்திரபாபு வழக்கின் முக்கியத்துவத்தை கருதி தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 – ஆம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் 18 எம்.எல்.ஏ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் வழக்கை முதல் அமர்வே விசாரிக்கும் என அறிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 தேதி – ஆம் தேதி முதல் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணை தொடங்கியது.
கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. ஜனவரி மாதம் 23 – ஆம் தேதி அன்று அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கபட்டது.பின்னர் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர்  கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
Image result for 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க
பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி மனு அளித்தார்.

பின்னர் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு கடந்த ஜூலை 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக 3வது நீதிபதி சத்யநாராயணன் அறிவித்தார்.அதன்படி ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விசாரணை நடத்தினார் நீதிபதி சத்யநாராயணன்.
நீதிபதி சத்யநாராயணன் முன்பு தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
நீதிபதி சத்யநாராயணன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.
Image result for 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க

இதனால் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பின்னர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இரவு குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதிக்கு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வந்தனர்.இதன் பின் அக்டோபர் 23 ஆம் தேதி மகாபுஷ்கர விழாவின் நிறைவு நாளில் , பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புனித நீராடினார்கள்.
Image result for தங்கதமிழ்ச்செல்வன்
 
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார் 3வது நீதிபதி சத்யநாராயணன். 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கினார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பின்போது முதலமைச்சர் பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகிறார். தகுதிநீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆஜராகினார்கள் .சபாநாயகர் தரப்பில் ஆரியமா சுந்தரம், அரசு தலைமை கொறடா தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகினார்கள்.
Image result for பழனிச்சாமி
 
இந்நிலையில் 18 எம் எல் ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு இன்று காலை வரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் தீர்ப்பை வசித்த  3வது நீதிபதி சத்யநாராயணன் ,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.
 

Leave a Comment