18 பேர் தகுதி நீக்க வழக்கு:ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!தொடர்ந்து தள்ளிப்போகும் வழக்கு?

தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

Related image

பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி மனு அளித்தார்.

பின்னர் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு கடந்த ஜூலை 4  ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக  3வது நீதிபதி  சத்யநாராயணன் அறிவித்தார். வரும் 23 முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விசாரணை  என்று  நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக 3வது நீதிபதி  சத்யநாராயணன்  விசாரணையை தொடங்கினார்.

இதன் பின்னர்  ஜூலை 23 ஆம் தேதி முதல் நேற்று வரை தினகரன் தரப்பு வாதாடியது.தினகரன் சார்பாக வழக்கறிஞர் ராமன் வாதாடினார்.

Image result for ttv

அந்த வாதத்தில்  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் ஜக்கையனுக்கும் தங்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் , 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது, உள்நோக்கம் கொண்டது. மேலும் அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என ஒருபோதும் சொன்னது கிடையாது. ஆட்சிக்கு எதிராக நாங்கள் செயல்படுகிறோம் என முதல்வர் கூறவில்லை. சபாநாயகர்தான் சொல்கிறார்.

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மீது நடவடிக்கை இல்லை என்பதுதான் முதல் குற்றச்சாட்டு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம்தான் என்று டிடிவி தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராமன் வாதங்களை முன்வைத்தார்.

இரண்டாவது நாளில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மற்றொரு மூத்த வழக்கறிஞரான மோகன் பராசரன் வாதாடினார்கள்.இந்த விசாரணையில் டிடிவி தரப்பு வாதத்தில்,முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டாலும் அதிமுக அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம்.எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவது தவறு என்றும் வாதிட்டனர்.

இதேபோல் மூன்றாம் நாள்  விசாரணையில் சபாநாயகர் தனபால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார்.அந்த வாதத்தில் முதல்வரை எதிர்ப்பது என்பது அரசை எதிர்ப்பது போன்றதுதான். ஆளுநரை சந்தித்தது முதலமைச்சர் பழனிசாமி  ஆட்சியை கலைக்கும் முயற்சிதான் என்று கூறினார்.

Image result for dhanapaul

இந்நிலையில் தற்போது தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை ஆகஸ்ட் 3, 6, 7ஆம் தேதிகளில் உயர்நீதிமன்ற 3ஆவது நீதிபதி விசாரிக்கிறார் .5 நாட்கள் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment