தமிழகத்தை சுட்டெரிக்கும் சூரியன்.! 17 இடங்களில் சதமடித்த வெயில்…

தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலத்தில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி கொண்டு வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையமானது, தமிழகத்தில் வெயிலின் அளவு 4 பாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கும் என அறிவுறுத்தியிருந்த்தது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் 108 பாரன்ஹீட் வரை பதிவாகி இருந்தது. நேற்று பதிவான வெப்ப அளவானது, தமிழகத்தில் 17 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டியுள்ளது . அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 105.44 பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

மேலும், திருத்தணியிலும் 105.44 டிகிரி பாரன்ஹீட், வேலூர், மதுரையில் தலா 104 டிகிரி பாரன்ஹீட், தஞ்சை , பாளையங்கோட்டை , பரங்கி பேட்டையில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் நாட்களில் இதேபோல வெப்பநிலை பதிவாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.