27 C
Chennai
Friday, October 22, 2021

#BREAKING: தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தீபாவளி முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும்.

தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தனி வழி, ஆயுத பூஜையை முன்னிட்டு 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தெரிவித்தார். மேலும், தீபாவளிக்கு பிறகு 17,719 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

spot_imgspot_img

Hot Topics

Read More