163 இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்..!!

163 இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்..!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 162 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் இன்று ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்கியுள்ளது. பரம எதிரிகள் மோதுவதால் வழக்கம் போல் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு எகிறியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்விரு அணிகளும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சந்திக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலே இமாம் உல்-ஹக், பஹார் ஜமானை வெளியேற்றி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
 இதனையடுத்து களமிறங்கிய பாபர் அசாம், சோயிப் மாலிக்கும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு போட்டியாக ரன் கணைக்கை தொடங்கினர். 4 வது ஓவரில் தொடங்கிய இவர்களுடைய கூட்டணி 21.2வது ஓவர் வரையில் நீடித்தது. இடைப்பட்ட ஓவர்களில் பாகிஸ்தானுக்கு நேர்த்தியான ரன் கணைக்கை இருவரும் சேர்த்தனர். கூட்டணி வலுப்பெற்ற நிலையில் பாபர் அசாமை (47) வெளியெற்றினார் குல்தீப் யாதவ். இதற்கிடையே பந்து வீசும்போது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டு ஹர்திக் பாண்டியா கீழே விழுந்தார், அவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் நட்சத்திரமாக விளையாடிய சோயிப் மாலிக் (43) ரன் அவுட் ஆனார். இதனையடுத்து பாகிஸ்தானின் விக்கெட்களை கேதர் ஜாதவ் வரிசையாக வெளியேற்றினார். 33.4 வது ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்களுடன் விளையாடியது. இதனையடுத்து மோசமான நிலையை மேம்படுத்த பாகிஸ்தானின் பிற்பாதி ஆட்டக்காரர்கள் முயற்சி செய்தார்கள். இந்தியாவின் அபாரமான பந்துவீச்சுக்கு இடையே மெதுவாக ரன் சேர்த்தனர். இதனால் பாகிஸ்தான் 150 ரன்களை கடந்தது. இறுதியில் அடுத்தடுத்த விக்கெட்களை பறிகொடுத்து விரைவில் நடையை கட்டியது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது, 162 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியாவிற்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக புவனேஷ் குமாரும், கேதர் ஜாதவும் தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். பும்ரா இரண்டு விக்கெட்களை எடுத்தார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *