மாமல்லபுரம் கடற்கரையில் 20 லட்சம் செலவில் முதலமைச்சருக்கு 160 அடி மணல் சிற்பம்

மாமல்லபுரம் கடற்கரையில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் ஏற்பாட்டில் 50 டன் மணல் கொண்டு ரூபாய் 20 லட்சம் செலவில் 160 அடி நீளத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணல் சிற்பத்தை கும்பகோணத்தை சேர்ந்த கவின் கல்லூரியின் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.இந்த மணல் சிற்பத்தை தமிழ் வளர்ச்சி,பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் கொடியசைத்து திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் ,

அதிமுக ஆட்சியின் சாதனைகளை நினைவு படுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.அதிமுக ஆட்சியில் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார் அவ்வாறு பேசுவது கண்டனத்திற்குரியது.தற்போது ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை போன்ற 12 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இந்த மணல் சிற்பம் பொதுமக்களின் பார்வைக்கு மூன்று நாட்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.கடந்த 10 நாட்களாக கவின் கல்லூரியின் சிற்பக் கலைஞர்கள் 10 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நின்றுகொண்டு இரட்டை இலை சின்னத்தை காண்பிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனபால், வி.எஸ்.ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Dinasuvadu desk

Recent Posts

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

1 min ago

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

38 mins ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

1 hour ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

1 hour ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

9 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

10 hours ago