கடந்த 24 மணி நேரத்தில் 16 மாநிலங்களில் கொரோனா பதிவாகவில்லை – மத்திய அமைச்சர்

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கு, நீடிக்கப்படுமா இல்லை தளர்வு செய்யப்படுமா என்று மக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. ஊரடங்கு குறித்து மே 3 க்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை கொரோனா வைரசால் 29,435 பேர் பாதிக்கப்பட்டு, 934 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே இதுவரை 6,869 பேர் குணமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை என்றும் கொரோனா குறித்த எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்