டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண் கட்டாயம்-ரிசர்வ் வங்கி..!

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண் அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்களின் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் பொருட்களை வாங்குவதற்கு கூகுள் பே, போன் பே, பே.டி.எம் ஆகிய செயலிகளின்  மூலமாக பணத்தை செலுத்துகின்றனர். இது போன்ற பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கார்டின் பின்புறம் இருக்கும் மூன்று இலக்க சி.வி.வி. விபரத்தை வழங்கிய பின் பணம் செலுத்தப்படுவது வழக்கம்.

தற்போது ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் படி மின்னணு பரிவர்த்தனையின் போது கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் பின்புறம் உள்ள 16 இலக்க எண், காலாவதியாகும் தேதி, சி.வி.வி. விபரம் ஆகியவற்றை அளிக்க வேண்டும். இந்த முறை குறித்து நுகர்வோர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ஒரு நபரிடம் பல கார்டுகள் இருக்கும் என்பதால் அந்த 16 இலக்க எண்ணை நினைவில் வைத்து பரிவர்த்தனை செய்வது கடினம்.

ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனையின் போதும் இந்த 16 இலக்கை எண்ணை அனுப்புவது என்பது சிரமமான செயலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புதிய திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது, இந்த முறையானது வாடிக்கையாளர்களின் பாதுக்காப்பு கருதியே மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறையானது அடுத்த ஆண்டிலிருந்து அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.