விழுப்புரம் மற்றும் செங்கல் பாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியத்தில் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்ப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இந்த 2023-ஆம் ஆண்டு இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55.173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4.534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது என காவல் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
