வெளிமாநில சிறையில் 150 காஷ்மீர் இளைஞர்கள்..!

காஷ்மிருக்கு சிறப்பு சேர்க்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ கடந்த மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெறிவிப்பார்கள் என்று முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் தொலைபேசி மற்றும் இணையதள வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தடுப்பதற்காக ஏராளமான இளைஞர்களை போலீசார் பிடித்து சென்று காவலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வன்முறைகளில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மீது 3000 வழக்குகள் பதிவிட்டு. 800 இளைஞர்கள் காவலில் வைத்திருக்கிறோம் மற்றும் வௌிமாநில சிறைகளில் 150 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

author avatar
Vidhusan