நிவார் புயல்: தமிழகத்தில் விரைவு ரயில்கள் உட்பட 15 ரயில் சேவைகள் ரத்து!

நிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் 6 விரைவு ரயில்கள் 15 ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

நிவார் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல், நாளை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறதாகவும், இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 100 – 110 கீ.மி. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புயலின் எதிரொலியாக, தமிழகத்தில் தமிழகத்தில் இயக்கப்படும் 6 விரைவு ரயில்கள் உட்பட 15 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 24-ம் தேதி சென்னை – தஞ்சாவூர் (Train NO : 06866), தஞ்சாவூர் – சென்னை (Train NO : 06865) இடையேயான ரயில் சேவை, நவம்பர் 25-ம் தேதி சென்னை – தஞ்சாவூர் (Train NO : 06866), சென்னை – திருச்சி (Train NO : 06795) , திருச்சி – சென்னை (Train NO : 06796) ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் மைசூர் – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – மைசூரு, ரயிலும், ஏர்ணாகுளம் – காரைக்கால், காரைக்கால் – ஏர்ணாகுளம், ரயிலும், கோயம்புத்தூர் – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – கோயம்புத்தூர், ரயிலும், புவனேஷ்வர் – பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி – புவனேஷ்வர், ரயிலும், பாண்டிச்சேரி – ஹவுரா ஆகிய ரயில்களில் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment