மூத்த மருத்துவர்களுக்கு 15% சம்பள உயர்வு….! தெலுங்கானா அரசு அதிரடி…!

மூத்த மருத்துவர்களுக்கு 15% சம்பள உயர்வு….! தெலுங்கானா அரசு அதிரடி…!

மூத்த மருத்துவர்களின் சம்பளத் தொகை 15 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு  மூத்த மருத்துவர் கூட்டமைப்புடன் இணைந்து இளநிலை மருத்துவர்கள்  பணியை புறக்கணிக்க முடிவு செய்தனர். மே 26-ஆம் தேதி கொரோனா தொடர்பான அனைத்து அவசர கால பிரிவுகளுக்கான சிகிச்சையை புறக்கணித்து, மருத்துவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், நோயாளிகளின் நிலை ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனையடுத்து,  மருத்துவர்களின் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து, மூத்த மருத்துவர்களின் சம்பளத் தொகை 15 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்தில் மருத்துவ கல்வி இயக்குனர் சார்ந்த பயிற்சி மருத்துவர்களின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.70,000-த்திலிருந்து ரூ.80,500 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube