சபரிமலை பகுதியில்  144 தடை உத்தரவு…!விளக்கம்தர கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு…!

சபரிமலை பகுதியில்  144 தடை உத்தரவு…!விளக்கம்தர கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு…!

சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில்  144 தடை உத்தரவு அமல் பற்றி விளக்கம்தர கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியது.திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பாலராமவர்மாவின் பிறந்த தினத்தையொட்டி கடந்த 5-ந் தேதி நடை திறந்து, 6-ந் தேதி சாத்தப்பட்டபோதும், பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.இதற்கிடையே சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.இந்த நிலையில் சபரிமலையில்  நவம்பர் 16 ஆம்  தேதி நடை திறக்கபட்டது . மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி  சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சபரிமலையில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் எதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது? என்று கேள்வி  எழுப்பியது.அது மட்டும் அல்லாமல்  144 தடை உத்தரவு அமல் பற்றி விளக்கம்தர கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *