144 தடை உத்தரவை மீறியதாக தென்காசியில் 300 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கூறியிருந்தார். ஆனாலும், பலர் உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிகின்றனர். 

இதனையடுத்து, 144 தடை உத்தரவை மீறியதாக தென்காசியில் இருசக்கர வாகனத்தில் சாலைகளில் சுற்றியதற்கு காவல் துறை  300 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.