கேரளாவில் 6 மாதங்களில் 140 இளைஞர்கள் தற்கொலை செய்ததாக ஆய்வு கூறும் தகவல்.!

கேரளாவில் 6 மாதங்களில் 140 இளைஞர்கள் தற்கொலை செய்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது 140 இளைஞர்கள்  தற்கொலை செய்து கொண்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் சமூக தற்காப்புத் துறையின் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினர்.

அதன்படி, நேற்று எஸ்.எச்.ஆர்.சி தலைவர் அன்டோனி டொமினிக் இளைஞர்கள் தற்கொலை செய்வதைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிக்கையின் படி, திஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், 13 முதல் 18 வயதுக்குட்பட்ட 140 இளைஞர்கள் 2020 ஜனவரி முதல் 2020 ஜூன் வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்கொலை செய்து கொண்டவர்களில் குடும்ப தகராறுகள், காதல் விவகாரங்கள், தேர்வுகளில் தோல்வி, மொபைல் போன்கள் தொடர்பான பிரச்சினைகள், ஆகியவை தற்கொலைக்கு முக்கிய காரணங்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிலும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் தற்கொலைகள் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்பிறகு மலப்புரம் மாவட்டம் உள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.