இந்திய எல்லையில் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள் – ராணுவ அதிகாரி!

இந்திய எல்லையில் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள் என  ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நட்புறவில் இருந்து விலகி போர் பதற்றமான சூழல் உருவாகி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் தீவிரமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையில் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், பாகிஸ்தானில் இருந்து சுமார் 140 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ தயாராக இருப்பதை ராணுவம் கவனித்து வருவதாகவும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக உயரமான மலை பகுதிகளில் பதுங்கி இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் இவர்கள் காஷ்மீர் மக்களை வன்முறைக்கு தூண்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

author avatar
Rebekal