சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து 14  எம்எல்ஏக்கள்  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14  எம்எல்ஏக்கள்  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.இதனையடுத்து நடைபெற்ற  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.

பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா .பின் கர்நாடக  பேரவையில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.நடைபெற்ற  குரல் வாக்கெடுப்பில் 105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் 1 சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றிபெற்றது.ஆனால் அதற்கு முன்னதாக  சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார்  ராஜினாமா செய்த 14 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.ஏற்கெனவே 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்எல்ஏக்கள்  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் .தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்ட சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.