வாட்டி வதைக்கும் வெயில்: 14 நகரங்களில் சதமடித்த கத்திரி வெயில்.!

வாட்டி வதைக்கும் வெயில்: 14 நகரங்களில் சதமடித்த கத்திரி வெயில்.!

heat

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை:

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

heat wave
heat wave Image source file image

சதமடித்த கத்திரி வெயில்:

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

அதன்படி, சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருத்தணி, வேலூர் ஆகிய நகரங்களில் வெயில் சதம் அடித்தது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவானது. மேலும், வரும் நாட்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube