130 கோடி ரூபாய் நஷ்டம் – தொடர்ந்து வெளியேறும் புகையால் மக்கள் அவதி.!

சென்னை மாதவரம் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.130 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் தீயை  கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையிலும், தற்போது குடோனில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது. இதனால் புகையின் காரணமான ரசாயன மூட்டைகளை அப்புறப்படுத்திக்கின்றனர். மேலும் தொடர் புகையின் காரணமாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.