13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது .13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது.

ஈரோடு, ஆண்டிப்பட்டி வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவு நடைபெற்றதால் தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கடந்த 29ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினோம் . தலைமை தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்றுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *