இனவாத மோதலால் தெற்கு சூடானில் 13 பேர் உயிரிழப்பு..!

தெற்கு சூடானில் நடைபெற்ற இனவாத மோதலால் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சூடான் நாட்டில் பல ஆண்டுகளாக இனவாத மோதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு லேக்ஸ் மாகாணத்தில் இருக்கும் கோனி மற்றும் தெயீத் என்ற இரண்டு இனங்களிடம் இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. கால்நடைகளை வேட்டையாடுதல், பழிவாங்கும் உணர்ச்சி ஆகிய செயல்பாடுகள் அடிக்கடி அங்கிருக்கும் நபர்களால் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த இனவெறியால் உள்ளூர் துப்பாக்கிகளையும் சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த இனவாத மோதலை அரசு கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது அங்கிருக்கும் ரும்பெக் மற்றும் ஈஸ்ட் என்ற இரு இனங்களுக்கு இடையே மோதல் நடைபெற்றுள்ளது.

இந்த மோதலால் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அங்கு அதிகளவில் போலீஸ் படையினை குவித்து மோதலை தற்போது தடுத்துள்ளது.